தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருப்பூரில் குட்கா பொருட்கள் பறிமுதல் - குட்கா பொருட்கள்

திருப்பூர்: சரக்கு வாகனத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கொண்டு வந்தவர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Gutka case
Tirupur police

By

Published : Nov 27, 2020, 10:34 PM IST

திருப்பூர் மாவட்டத்திற்கு கார் மற்றும் சரக்கு வேன் மூலம் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை கொண்டு வருவதாக வடக்கு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

தகவல் அடிப்படையில் வடக்கு காவல்துறையினர் எம்.ஜி.ஆர் சிலை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர், அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமாக வந்த கார், சரக்கு வேனை காவலர்கள் மறித்து சோதனையிட்டனர். அதில் அரசால் தடை செய்யப்பட்ட 700 கிலோ புகையிலை பொருட்கள், குட்கா ஆகியவை இருந்துள்ளது.

வாகனத்தில் இருந்த இரண்டு பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் குன்னத்தூரை சேர்ந்த மணிகண்டன் (26), பாலசிங் (21) என்பது தெரியவந்தது.

மேலும் அவர்கள் குன்னத்தூரிலிருந்து திருப்பூரில் உள்ள கடைகளுக்கு கார் மூலம் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை விநியோகம் செய்வதர்காக எடுத்து வந்தது தெரியவந்தது.

ABOUT THE AUTHOR

...view details