திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுகாவிற்கு உள்பட்ட குமாரபாளையம் ஊராட்சியில் அரசு உயர்நிலை பள்ளி அமைந்துள்ளது. இங்கு ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்துவருகின்றனர். இந்த பள்ளிக்கு அருகில் உள்ள காலி இடத்தில்தான் மாலை நேரங்களில் மாணவர்கள் அமர்ந்து படித்தும், விளையாடியும் வருகின்றனர்.
ஆக்கிரமிப்பை தடுக்கக்கோரி ஆட்சியரிடத்தில் மனு! - வருவாய் துறை அலுவலர்
திருப்பூர்: தாராபுரத்தில் அரசு பள்ளி மைதானத்தை ஆக்கிரமிப்பு செய்யும் நடவடிக்கையை தடுத்து நிறுத்தக் கோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
govt school issue petition
இந்நிலையில், பள்ளிக்கு வெளியில் உள்ள இடத்தை முத்துசாமி என்பவர் வருவாய் துறை அலுவலர்களின் துணையுடன் ஆக்கிரமிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்படி தனிநபர் ஆக்கிரமிக்கும் பட்சத்தில் பள்ளிக்கு தேவையான ஆய்வகம், நூலகம் உள்ளிட்ட கட்டடங்கள் கட்டுவதற்கு இடமில்லாமல் போகும் என்பதால், இதனை தடுத்து நிறுத்தி பள்ளிக்கு சொந்தமான இடத்தை பள்ளிக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர்.