தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சடலத்திற்கு ஒப்பாரி வைத்து போரட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள்

திருப்பூர் : மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆறாவது நாளாக கண்களில் கருப்பு துணி கட்டியும், சடலத்திற்கு ஒப்பாரி வைத்தும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Govt Employees Union Struggle
Govt Employees Union Struggle

By

Published : Feb 7, 2021, 4:56 PM IST

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆறாவது நாளாக தொடர் கண்டன ஆர்ப்பாட்டம், சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், அகவிலைப்படி , சரண்டர் உள்ளிட்டவைகளை திரும்ப தர வேண்டும் , நகராட்சி மாநகராட்சி பகுதிகளில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் தர நடவடிக்கை எடுக்க வேண்டும், கரோனா காலத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்கு சிறப்பு ஊதியம் தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 100க்கும் மேற்பட்டோர் கண்டன கோஷங்களை எழுபினர்.

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில், தங்களைது கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு எடுத்து செல்லும் வகையில் கண்களில் கருப்பு துணி கட்டி தராசுகளை கையிலேந்தியவாறு அரசின் தாமதத்தால் அரசு ஊழியர்கள் இறந்து கொண்டிருப்பதாக சடலத்திற்கு ஒப்பாரி வைத்து நூதன முறையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து,சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

போரட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள்

ABOUT THE AUTHOR

...view details