தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருப்பூரில் 80 சதவீத பேருந்துகள் இயக்கப்படவில்லை! - திருப்பூரில் 80 சதவீத பேருந்துகள் இயக்கப்படவில்லை!

திருப்பூர்: தமிழ்நாட்டில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள வேலை நிறுத்தம் காரணமாக, திருப்பூரில் 80 சதவீத பேருந்துகள் இயக்கப்படவில்லை.

போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிருத்தம்
போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிருத்தம்

By

Published : Feb 25, 2021, 3:05 PM IST

தமிழ்நாட்டில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள வேலை நிறுத்தம் காரணமாக திருப்பூரில் 80 சதவீத பேருந்துகள் இயக்கப்படவில்லை. 14ஆவது ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை உடனடியாக ஏற்படுத்திட வேண்டும், ஓய்வு பெறும் போக்குவரத்து ஊழியர்களுக்கு உடனடியாக பென்ஷன் உள்ளிட்ட தொகைகளை திரும்ப அளிக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, போக்குவரத்து தொழிற்சங்கங்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளன.

இதனையொட்டி திருப்பூரில் 80 சதவீத பேருந்துகள் இயக்கப்படவில்லை. திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம், பல்லடம் , காங்கேயம் உள்ளிட்ட பகுதிகளிலும் இதே நிலை நிலவுவதால் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒருசில அரசுப் பேருந்துகளும் தனியார் பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. இதே போல் ஆம்பூரில் பெரும்பாலான அரசு பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். பின் செங்கல்பட்டிலும் போக்குவரத்துத் துறை தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தால், அனைத்து தரப்பினரும் அவதிக்கு உள்ளாகினர்.

இதையும் படிங்க:நாடு தழுவிய போராட்டம்: அரசுப் பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

ABOUT THE AUTHOR

...view details