திருப்பூர்:திருப்பூரின் பல்லடம் சாலை வித்யாலயம் அருகில் தனியார் சாயப்பட்டறை ஒன்று செயல்பட்டு வந்தது. இங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை கழிவு நீர் தேக்கத் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் வடிவேல், நாகராஜ், ராமகிருஷ்ணன் ஆகிய 3 பேர் ஈடுபட்டனர்.
இதில் தொட்டிக்குள் இறங்கிய வடிவேலுவுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக சத்தம் கேட்டு நிறுவன மேலாளர் தினேஷ்பாண்டியன், எலக்ட்ரீசியன் ராஜேந்திரன் ஆகியோர் அங்கு வந்து தொட்டிக்குள் இருந்தவர்களை காப்பாற்ற முயற்சித்துள்ளனர்.
சாயப்பட்டறையில் அரசு அலுவலர்கள் ஆய்வு
அப்போது விஷ வாயு அதிகமாகி வடிவேல், தினேஷ்பாண்டியன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அக்கம்பக்கத்தினர், மீதமிருந்த உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த 3 பேரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.