ஒடிசாவைச் சேர்ந்த ஜெகன் (28) என்பவர் தனது மனைவி தேவியுடன் (24), திருப்பூர் பழைய ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் மூன்று மாதம் கர்ப்பமாக உள்ள தேவியை அழைத்துக்கொண்டு புது ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் அமைந்துள்ள நகர ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.
அங்கு தேவிக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டுள்ளது. இதனை ஜெகன் சென்று பார்த்தபோது அதில் புழுக்கள், பஞ்சு போன்ற கிருமிகள் மிதந்துள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, மொழி பிரச்னை காரணமாக நண்பர் ஜோசபிடம் தெரிவித்துள்ளார்.
அங்கு பணியில் இருந்த மருத்துவர்களிடம் இதுகுறித்து கேட்டபோது அலட்சியமாக பதில் அளித்ததாகவும்; பொருளாதாரத்தில் பின்தங்கிய பலர் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை சார்ந்துள்ள நிலையில், இங்கு அலட்சியமாக மருத்துவம் பார்க்கப் படுவதாகவும் கர்ப்பிணிப் பெண்ணுக்கு வேண்டப்பட்டவரான ஜோசப் குற்றம்சாட்டினார்.