தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொரியர் சர்வீஸ் மூலம் கஞ்சா கடத்தல்

திருப்பூரில்: ஆந்திராவில் இருந்து கொரியர் சர்வீஸ் மூலம் கஞ்சா கடத்தி வந்தவர்களை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் இருந்து ஒரு காரையும் பறிமுதல் செய்துள்ளனர்.

Tirupur cannabis sellers
cannabis smuggling

By

Published : Jun 3, 2020, 3:42 PM IST

திருப்பூர் அனுப்பர்பாளையம் காவல்துறையினர் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சரவணன் மற்றும் செல்லதுரை ஆகிய இருவர் வந்த வாகனத்தை சோதனையிட்டப் போது அதில் 15 கிலோ கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது.

உடனடியாக இருவரிடமும் விசாரனை மேற்கொண்ட காவல்துறையினர் ஆந்திராவில் இருந்து 15 கிலோ கஞ்சாவை கொரியர் சர்வீஸ் மூலம் அவிநாசி கொண்டு வந்து பின்பு அதை திருப்பூரில் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்வதற்காக கொண்டு வந்தது கண்டறியப்பட்டது.

உடனடியாக சரவணன் மற்றும் செல்லதுரையை கைது செய்த காவல்துறையினர் அவருக்கு உதவிய ரகு, ஹரிஷ் ஆகிய நான்கு பேரையும் கைது செய்து கஞ்சா கடத்தி வந்த காரையும் பறிமுதல் செய்துள்ளனர்.

இதையும் படிங்க:குட்கா பொருள்கள் விற்றுவந்த இருவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details