திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி அணைக்கு வரும் காண்டூர் கால்வாயில் நேற்றிரவு காட்டு யானை ஒன்று தண்ணீர் குடிக்க வந்தபோது தவறி கால்வாயில் விழுந்துள்ளது. நீண்ட நேரம் தண்ணீரில் போராடிய காட்டுயானை நீரின் வேகம் காரணமாக கால்வாயில் ஏற முடியாமல் இறந்து போனது.
இந்நிலையில், அவ்வழியே ரோந்து பணியில் ஈடுபட்ட வனத்துறையினர், இறந்த நிலையில், நீரில் மூழ்கி கிடந்த யானையின் உடலை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மீட்புப் பணியின் போது வனக்காவலர் சந்துரு என்பவர் கால்வாயில் விழுந்து மாயமானார். அவர் நீண்ட நேரமாக தென்படாத காரணத்தால், நீரில் மூழ்கி வனக்காவலர் இறந்திருக்கலாம் எனக் கருதிய தீயணைப்பு துறையினர், வனத் துறையினர் காண்டூர் கால்வாய் மற்றும் திருமூர்த்தி அணை பகுதியில் தீவிரமாக தேடிவந்தனர்.