தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நொய்யல் ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை-மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு! - வடகிழக்கு பருவமழை

திருப்பூர்: வடகிழக்கு பருவமழை காரணமாக திருப்பூர் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது இதனால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

flood in noel river

By

Published : Oct 19, 2019, 4:40 PM IST

தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கோவை நொய்யல் ஆற்றில் அதிக அளவு தண்ணீர் பெருக்கெடுத்து வெள்ளமாக பாய்ந்து வருகிறது.

இதேபோல், திருப்பூரில் பாயும் நொய்யல் ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு அப்பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் வெள்ளம் அதிகமாகும் சமயத்தில் கரையோர மக்கள் அருகில் உள்ள பள்ளிகள் மற்றும் தனியார் திருமண மண்டபங்களில் தங்கவைக்கவும் மாவட்ட நிர்வாகம் முன்னேற்பாடுகளை செய்துள்ளது.

திருப்பூர் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு

‌மேலும் இந்த வெள்ளப்பெருக்கினால் திருப்பூர் மங்கலம் சாலை, கல்லூரி சாலை இணைக்கக்கூடிய அனைபாளையம் தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: 7 மாவட்டங்களில் கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம்!

ABOUT THE AUTHOR

...view details