தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாத்திரக்கடை தீவிபத்து - பொருட்கள் நாசம் - fire in tirupur shop

திருப்பூர்: அதிகாலையில் பாத்திரக்கடையில் ஏற்பட்ட தீவிபத்தால் 25 லட்சம் மதிப்புள்ள பாத்திரங்கள் எரிந்து நாசம்

tpr fire

By

Published : Oct 9, 2019, 10:28 AM IST

திருப்பூர் - திருமுருகன் பூண்டியில் ஜீகாராம் என்பவருக்குச் சொந்தமான பாத்திரங்கள் விற்பனை செய்யும் கடை உள்ளது. இன்று அதிகாலை ஐந்து மணியளவில் பாத்திரக் கடையின் ஒரு பகுதி திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதனையடுத்து கடைக்குள் படுத்திருந்த ஜீகாராம் மற்றும் ஊழியர், சுவர் ஏறிக் குதித்து வெளியில் தப்பிச் சென்றனர்.

தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு மூன்று வாகனங்களில் வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்தத் தீ விபத்தில் பாத்திரக் கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பித்தளை, செம்பு மற்றும் சில்வர் பாத்திரங்கள் தீக்கிரையாகின.

தீவிபத்து ஏற்பட்ட பாத்திரக் கடை

சேதமான பொருட்களின் மதிப்பு 25 லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்தத் தீ விபத்து குறித்து திருமுருகன்பூண்டி காவல் நிலையத்தினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: ரஷ்யாவில் சொகுசு கப்பல் தீயில் எரிந்து நாசம்

ABOUT THE AUTHOR

...view details