திருப்பூர் மாவட்ட ஆயுதப்படையில் காவலராகப் பணியாற்றி வருபவர் ராதாகிருஷ்ணன். இவர் கடந்த 12ஆம் தேதி மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பூம்புகார் நகர் பகுதியில் பதிவு எண் இல்லாத இரு சக்கர வாகனத்தை வைத்துக்கொண்டு, அந்த வழியே ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஒட்டிகளை வழிமறித்து அபராதம் செலுத்தக்கோரி கட்டாயப்படுத்தியுள்ளார். இதற்கு அங்கிருந்த வாகன ஒட்டிகள் மறுப்பு தெரிவித்ததோடு, “காவலர் ஆகிய நீங்களே ஹெல்மெட் அணியாமலும், பதிவு எண் இல்லாத வாகனத்திலும் வந்து விதிமுறையை மீறியுள்ளீர்கள்” என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வாகன ஓட்டிகளை மிரட்டி அபராதம் வசூலித்த ஆயுதப்படை காவலர் சஸ்பெண்ட்! - ஆயுதப்படை காவலர்
திருப்பூர்: ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதோடு மட்டுமல்லாமல், வாகன ஓட்டிகளை மிரட்டி அபராதம் வசூலித்த ஆயுதப்படை காவலரை மாவட்ட காவல்கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
அதற்கு அவர் உயர் அலுவலர்களிடம் சிறப்பு அனுமதி வாங்கியுள்ளதாகவும், ஹெல்மெட் அணிய அவசியம் இல்லை என்றும் கூறியுள்ளார். அவர் சொன்னதை ஏற்காத வாகன ஓட்டிகள் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதை அங்கிருந்த வாகன ஓட்டி ஒருவர் தனது செல்ஃபோனில் படம்பிடித்து சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கயல்விழி நடத்திய விசாரணையில், அவர் வாகன ஓட்டிகளை மிரட்டி அபராதம் வசூலித்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை பணியிடை நீக்கம் செய்து காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.