திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட கே.வி.ஆர். நகர் இரண்டாவது வீதியைச் சேர்ந்தவர்கள் பாண்டி-மணியாள் தம்பதி. மணியாள் இரு நாள்களுக்கு முன்பாக பிரசவத்திற்காக மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று மாலை அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
குழந்தையைப் பெற்றெடுத்த பெண் உயிரிழப்பு - உறவினர்கள் போராட்டம்! - Government Hospital, Thirupur
திருப்பூர்: மருத்துவர்களின் அலட்சியத்தால் குழந்தையைப் பெற்றெடுத்த பெண் உயிரிழந்ததாகக் கூறி, அப்பெண்ணின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தாயும்சேயும் நலமுடன் இருந்த நிலையில் நேற்று இரவு மணியாளுக்கு திடீரென்று ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது. அப்போது மருத்துவர்கள் யாரும் இல்லாததால் செவிலியர் மருத்துவம் பார்த்துள்ளனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையறிந்த அவரது உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு விரைந்த காவல் துறையினர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து அவர்கள் கலைந்துசென்றனர்.
இதையும் படிங்க:சிறுமியை கர்ப்பிணியாக்கி ஏமாற்ற முயன்ற காதலன் போக்சோவில் கைது