தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கருத்து கேட்புக் கூட்டத்தில் அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவசாயிகள் - திருப்பூரில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

திருப்பூர்: பெட்ரோல் குழாய் அமைப்பதற்கு விவசாயிகளிடையே கருத்து கேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்திருந்த நிலையில் விவசாயிகள் அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

farmers-protest
farmers-protest

By

Published : Mar 5, 2020, 9:16 PM IST

திருப்பூர் மாவட்டத்தில் அழகுமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாரதிய பெட்ரோல் நிறுவனம் சார்பில் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விவசாய நிலங்கள் அல்லாமல் நெடுஞ்சாலை ஓரமாக கொண்டு செல்ல விவசாயிகள் வலியுறுத்தி வந்த நிலையில், இன்று விவசாயிகளுடன் கருத்து கேட்புக் கூட்டம் திருப்பூர் மாவட்டம், தெற்கு தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில், 21 விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், விவசாய சங்கப் பிரதிநிதிகளைக் கூட்டத்திற்குள் அனுமதிக்காத காரணத்தால் விவசாயிகள் அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

விவசாய விளைநிலங்கள் வழியே குழாய் பதிப்பதால் ஏற்படும் பாதிப்புகளுக்கு, எழுத்து மூலம் விளக்கம் அளித்தால் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்போம் என விவசாயிகள் தெரிவித்து கூட்டத்தைப் புறக்கணித்துச் சென்றனர்.

இதையும் படிங்க: பொய் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் - சேலம் விவசாயிகள் மனு

ABOUT THE AUTHOR

...view details