திருப்பூர்:தாராபுரம் அருகேயுள்ள உப்பாறு அணைக்கு திருமூர்த்தி அணையிலிருந்து பிஏபி பிரதான வாய்க்காலில் அரசூர் சட்டையில் இருந்து தண்ணீர் திறந்துவிடக்கோரி கடந்த செவ்வாய்க்கிழமை முதல் அப்பகுதி விவசாயிகள் போராட்டம் நடத்திவருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்ட உப்பாறு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினருக்கு ஆதரவாக தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை நிறுவனத் தலைவரும், காங்கேயம் சட்டப்பேரவை உறுப்பினருமான தனியரசு, மக்கள் நீதி மய்யத்தின் திருப்பூர் தென் கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் ஆர். பாலசுப்பிரமணியன் வாயில் கருப்புத்துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொதுப்பணித்துறை அலுவலர்களைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதுகுறித்து காங்கேயம் சட்டப்பேரவை உறுப்பினர் தனியரசு கூறுகையில், " உப்பாறு அணை, காமராஜர் காலத்தில் கட்டப்பட்டது. அக்காலத்தில் உப்பாறு பாசனத்தின் மூலம் 6,400 ஏக்கர் நீர் பாசனம் பெற்று மூன்று போகங்கள் விளைந்தது.