திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டாரப் பகுதிகளில் உயர்மின் கோபுரங்கள் அமைப்பதற்கு ஏற்கனவே மின் பாதைகள் அளவீடு செய்யப்பட்டு கோபுரங்கள் அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது.
உயர்மின் கோபுரம் அமைப்பது தொடர்பாக விவசாயிகள் ஆட்சியரிடம் மனு - வாவிபாளையம் விவசாயிகள் கோரிக்கை மனு
திருப்பூர்: வாவிபாளையம் விவசாயிகள் சார்பாக உயர் மின் கோபுரம் மின் பாதை அமைப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
![உயர்மின் கோபுரம் அமைப்பது தொடர்பாக விவசாயிகள் ஆட்சியரிடம் மனு திருப்பூர் மாவட்டம் வாவிபாளையம் விவசாயிகள் சார்பாக உயர் மின் கோபுரம் மின் பாதை அமைப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-02:01:29:1599467489-tn-tpr-01-farmerspetition-vis-7204381-07092020132858-0709f-00980-714.jpg)
கடந்த வாரம் பொங்கலூர் ஒன்றியம் வாவிபாளையம் கிராமத்தில் ஏற்கனவே அளவீடு செய்யப்பட்ட பாதைகளை தவிர மேலும் சில பாதைகளில் உயர்மின் கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்றது.
இதனை விவசாயிகள் தடுத்து நிறுத்தினர் முன்னறிவிப்பு எதுவும் இல்லாமலும் விவசாயிகளிடம் கருத்து கேட்காமலும் ஏற்கனவே அளவீடு செய்யப்பட்ட பாதைகளை தவிர வேறு பாதைகளில் அலுவலர்கள் உயர்மின் கோபுரம் அமைக்க முயற்சி செய்வதாக குற்றஞ்சாட்டி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இன்று கிராம விவசாயிகள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.