மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத்திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் 19ஆவது நாளாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வேளாண் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட முயன்றோர் கைது! - Struggle against agricultural law
திருப்பூரில் வேளாண் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி இரண்டாது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட முயன்ற விவசாயிகளை காவல் துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில் இவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், திருப்பூரில், மத்திய அரசு விவசாயிகளின் கோரிக்கையை உடனடியாக பரிசீலிக்க வேண்டும் என வலியுறுத்தி தினமும் போராட்டம் நடைபெற்றுவருகிறது.
அதன் ஒரு பகுதியாக, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட வந்த அனைத்து இந்திய விவசாய போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினரை காவல் துறையினர் கைது செய்தனர். இப்போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியும், கார்ப்பரேட் நிறுவனங்களை சாட்டையால் அடித்தும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இதையும் படிங்க:திருச்சியில் விவசாயிகளுக்கு ஆதரவாக காத்திருப்புப் போராட்டம்!