திருப்பூர் மங்கலம் ரோட்டில் உள்ள தனியார் திரையரங்கில் தி லயன் கிங் எண்ட் எனும் குழந்தைகளுக்கான படம் திரையிட பட்டுள்ளது. இதற்கான டிக்கெட்டுகள் ரசிகர்களுக்கு வழங்கப்பட்டன. இதில் ஏராளமானவர்கள் ஆன்லைனில் பதிவுசெய்து வந்திருந்தனர். இந்த நிலையில் மாலை 6.30 மணிக்கு தொடங்க வேண்டிய காட்சி 7.10 மணி வரை படம் திரையிடப்படவில்லை. இதனால், பொதுமக்கள் தியேட்டர் ஊழியர்களிடம் கேள்வி கேட்டனர்.
திரையரங்கு ஊழியர்களுடன் ரசிகர்கள் வாக்குவாதம்! - issues
திருப்பூர்: தனியார் திரையரங்கில் மாலை காட்சிக்கு டிக்கெட் கொடுக்கப்பட்டு 45 நிமிடம் கழித்து, காட்சி ரத்து செய்யப்பட்டதாக கூறி பொதுமக்கள் வெளியேற்றப்பட்டதால் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதற்கு மெசின் ரிப்பேர் என கூறிய தியேட்டர் ஊழியர்கள் டிக்கெட் பணத்தை திருப்பி கொடுப்பதாக அறிவித்தனர். ஆனால் ஆன்லைன் முன்பதிவு கட்டணம் 50 ரூபாயை திருப்பித் தரவில்லை. வேண்டுமென்றால் அடுத்த காட்சிக்கு வந்துப்பார்த்து கொள்ளுங்கள். இல்லையெனில் ஆன்லைன் முன்பதிவு கட்டணத்தை திருப்பி தர முடியாது என்று தெரிவித்தனர்.
இதனால் சிலர் தியேட்டர் டிக்கெட் கவுண்டரில் இருந்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனாலும், முன்பதிவு கட்டணத்தை கொடுக்க தியேட்டர் நிர்வாகம் முன்வரவில்லை. இதனால் அங்கு சிறிது பரபரப்பு நிலவியது. மேலும் குழந்தைகளுடன் படம் பார்க்க வந்த பெற்றோர்களும் வேறு திரையரங்கிற்க்கு கூட செல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் சென்றனர்.