திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியைச் சேர்ந்த மணி, அப்பகுதியிலுள்ள தனியார் ஆலையில் பணிபுரிந்துவந்தார். அந்த ஆலையின் உரிமையாளர் சண்முக சுந்தரம், மணி மீது பொய்யான திருட்டுப் புகார் சுமத்தி மணி, அவரது மனைவி, மகன் ஆகிய மூன்று பேரை ஆலையின் ஓர் அறையில் அடைத்துவைத்து தொடர்ந்து மூன்று நாள்கள் சித்ரவதை செய்து அவருக்குச் சொந்தமான 1.5 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அபகரித்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து காங்கேயம் காவல் நிலையத்தில் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
துப்பாக்கியைக் காட்டி மிரட்டி பறிமுதல்செய்த சொத்துகளை மீட்டுத்தர எஸ்பி அலுவலகத்தில் மனு கொடுத்த புகாரைத் திரும்பப் பெற வலியுறுத்தி தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வந்துகொண்டிருப்பதால் சொந்த இடத்தில் வசிக்க முடியாமல் நாடோடி வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும், சண்முகசுந்தரத்திற்கு ஆதரவாக காங்கேயம் தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் நடராஜ் உள்ளிட்டோர் இருந்துவருவதாகவும் கூறும் மணி, தனது குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டியும், சொத்தை மீட்டுத் தர வேண்டும் என வலியுறுத்தியும் இன்று தனது குடும்பத்தினருடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
இதையும் படிங்க:திருப்பூரில் குடிநீர் வசதி சரியாக இல்லை... மாநகராட்சி அலுவலகம் முற்றுகை!