ஏழு கட்டங்களாக நடைபெறும் மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் அடுத்த மாதம் 18 ஆம் தேதி நடக்கவிருக்கிறது. தேர்தல் பணிகளும், பரப்புரைகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
உரிய அனுமதியின்றி கொண்டு செல்லப்பட்ட ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்...! - பறிமுதல்
திருப்பூர்: உரிய அனுமதியின்றி கொண்டு செல்லப்பட்ட ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்குரிய வகையில் சென்ற பொலிரோ வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த செல்வம், ஷாஜகான் ஆகிய இருவரும் உரிய அனுமதி இன்றி 200 ஜெலட்டின் குச்சிகள் கொண்டு செல்வது தெரியவந்தது.
இதையடுத்து வெடி பொருட்களைப் பறிமுதல் செய்த பறக்கும்படை அலுவலர் ஸ்ரீதர் அதனை தாராபுரம் வட்டாட்சியர் ரவிச்சந்திரனிடம் ஒப்படைத்தார்.