திருப்பூர் மாவட்டம் தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தேர்தலுக்கு பயன்படுத்தப்படக் கூடிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வைத்திருக்க கூடிய தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்றூ (செப்.21) மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் நிர்வாகிகள் முன்னிலையில் ஆய்வு செய்தார்.
வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் - Tiruppur Latest News
திருப்பூர் : தெற்கு தொகுதிக்குட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் அங்கீகரிக்கப்பட்ட கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் ஆய்வு செய்தார்.
Evm machine inspection
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்ட பின்னர் அரசியல் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பாதுகாக்கப்பட்ட அறைக்கு சீல் வைக்கப்பட்டது.
இதில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.