திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ளது சிவன்மலை. சிவன்மலை கிரிவலப்பாதையில் சென்ற சிலர், அங்கு வித்தியாசமான ஒளியை எழுப்பிய வண்ணம் அரியவகை விலங்கினம் இருப்பதைப் பார்த்துள்ளனர்.
பின்னர் வனத்துறை அலுவலர்களுக்கு தகவல்கொடுக்கவே சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், இவை அரியவகை இனத்தைச் சார்ந்த மரநாய் ஆகும். இதன் வயது 2 அல்லது 3 இருக்கலாம், உணவு தேடி இங்கு வந்திருக்கலாம் எனத் தெரிவித்தனர்.
வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட அரிய வகையான மரநாய் ஊதியூர் பகுதியில் உள்ள காப்புக்காட்டில் பத்திரமாக விடப்பட்டது.
2008ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இவை அழிந்து வரும் விலங்குகளின் பட்டியலில் உள்ளதாகவும், பறவைகளையும் எலிகள் ஆகியவைகளை உண்டுவாழும் பாலூட்டி வகையைச் சார்ந்தது என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.
மேலும் நிலா வால் மரநாய், குட்டை வால் மரநாய், மிகச் சிறிய வால் மரநாய் என மரநாய்கள் மூன்று வகையில் உள்ளது. இவைகள் அதிகளவில் இரவு நேரங்களில் வேட்டையாடும், பகலில் தூங்கும் தன்மை கொண்டது. மரநாய் இனங்கள் மிகவும் தைரியமான விலங்குகள் ஆகும். மரநாய்கள் 4 முதல் 8 குட்டிகள் வரை ஈனும் என்கின்றனர் வனத்துறையினர்.
இதையும் படிங்க:நேரலையை ஸ்தம்பிக்க வைத்த பாண்டாவின் பிரசவம் - வாழ்த்து மழையில் நனைந்த பாண்டா குட்டி!