திருப்பூர் குளத்துப்புதூர் பகுதியை சேர்ந்தவர் மாரியம்மாள். இவர் தனது மகன் மணித்துரை தாய்லாந்தில் சிக்கியுள்ளதாக மத்திய அரசிடம் புகார் தெரிவித்திருந்தார். இவரது புகாருக்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் இளைஞரை மீட்க துரித நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
காச ரெடி பண்ணி வச்சுக்கோங்க... அப்பதான் உங்க பையன் இந்திய வருவான் - தூதரக அலுவலகர் தடலாடி - தூதரக அலுவலகர்
திருப்பூர்: தாய்லாந்தில் சிக்கியுள்ள இளைஞரை மீட்க தூதரக அலுவலர்கள் அபதாரம் கேட்பதாக, பாதிக்கப்பட்ட இளைஞரின் தாயார் புகார் தெரிவித்துள்ளார்.

மாரியம்மாள்
இந்நிலையில் தூதரக அலுவலர்கள் மாரியம்மாளை தொடர்புக்கொண்டு அபராத தொகை தயார் செய்து வைத்திருங்கள் அப்போது தான் உடனடியாக உங்கள் மகனை இந்தியாவிற்கு அனுப்ப முடியும் என தெரிவித்துள்ளனர்.
இதற்கு தன்னிடம் பணம் இல்லை ஆகவே தான் அரசின் உதவியை நாடியுள்ளதாக தெரிவித்தார். மேலும் தாய்லாந்தில் மணித்துரையை போல் பல இளைஞர்கள் சிக்கி உள்ளதாகவும் அவர்களையும் மீட்டு இந்தியாவிற்கு அழைத்து வர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.