திருப்பூர்: பல்லடம் குன்னாங்கல்பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடாச்சலம் (62). இவர் சாய ஆலை நிறுவனம் நடத்திவருகிறார். இந்நிலையில், வெங்கடாச்சலம் இன்று (ஏப்ரல் 15) பல்லடம் சாலை வித்யாலயம் பகுதியில் உள்ள எஸ்பிஐ வங்கிக்கு காரில் வந்து வங்கியில் தொழில் நிமித்தமாக எட்டு லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துள்ளார். அப்பணத்தை காரில் வைத்துவிட்டு வண்டியை எடுக்க முயன்றுள்ளார்.
வங்கியிலிருந்து வெளியே வந்தவரிடம் ரூ 8 லட்சம் கொள்ளை - திருப்பூர்
பல்லடம் சாலையில் உள்ள எஸ்பிஐ வங்கியில் பணம் எடுத்து வெளியே வந்தவரிடமிருந்து 8 லட்சம் ரூபாய் கொள்ளையடித்த அடையாள தெரியாத நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
அப்போதும், வெங்கடாச்சலத்தை பின்தொடர்ந்த அடையாளம் தெரியாத நபர்கள் காரில் முன் இருக்கையில் வைத்திருந்த எட்டு லட்சத்தை எடுத்துக்கொண்டு, அங்கிருந்த இருசக்கர வாகனத்தில் தப்பினர். பின்னர், கண் இமைக்கும் நேரத்தில் பணம் பறிபோனதை கண்டு வெங்கடாச்சலம் அலறினார். இது தொடர்பாக வீரபாண்டி காவல் துறையினருக்கு புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: கொடியங்குளம் கலவரம்: 'கர்ப்பிணிப் பெண்ணை பூட்ஸ் காலால் உதைச்சாங்க' - பத்திரிக்கையாளரின் நேரடி சாட்சியங்கள்!