தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பல்லடம் படுகொலை விவகாரம்.... எடப்பாடி பழனிசாமி கண்டனம்! - edappadi about tiruppur incident

eps condemns palladam issue: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் வெட்டிக் கொலைச் செய்யப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து உள்ளார்.

பல்லடம் படுகொலை விவகாரம்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
பல்லடம் படுகொலை விவகாரம்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 4, 2023, 2:27 PM IST

திருப்பூர்:பல்லடம் அருகே வீட்டின் அருகில் மது குடித்ததை தட்டிக்கேட்டதற்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார் .

இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில், "திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணறு பகுதியில் வீட்டின் முன் மது அருந்தியவர்களை தட்டி கேட்டதற்காக மோகன்ராஜ் என்பவரையும், அவரது தாயார் சகோதரர் மற்றும் சித்தி என நான்கு பேரை குடும்பத்துடன், போதை கும்பல் கொடூரமாக வெட்டி படுகொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விடியா அரசு பதவியேற்றதிலிருந்து நாள்தோறும் நம் மாநிலம் கொலை கொள்ளை என கொலை மாநிலமாகவும் ,சட்ட ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்த தமிழகமாகவும் , போதை பொருட்களின் தலைநகரமாகவும் திகழ்ந்து கொண்டிருக்கிறது, இதனை சரி செய்ய வேண்டிய இடத்தில் உள்ள முதலமைச்சரோ வெற்று விளம்பரத்தில் மட்டும் தனது முழு கவனத்தையும் செலுத்தி கொண்டிருப்பது வெட்கக்கேடானது.

இதையும் படிங்க:Palladam family murder: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் வெட்டிக்கொலை... முன்விரோதம் காரணமா? பின்னணி என்ன?

காவல் துறையை கையில் வைத்துக்கொண்டு மக்களைக் காப்பாற்ற துப்பு இல்லாமல், நிர்வாக திறனற்ற பொம்மை முதலமைச்சருக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இனியாவது காவல் துறையை தனது ஏவல் துறையாக மட்டும் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, காவல் துறைக்கு முழு சுதந்திரம் வழங்கி, சட்ட ஒழுங்கை நிலைநிறுத்த வேண்டுமென்று விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

மேலும் இந்த கொடூர குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைவாகக் கண்டுபிடித்து, அவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த விடியா அரசை வலியுறுத்துவதோடு, உயிரிழந்த மோகன்ராஜ் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் , வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இச்சம்பவம் நடந்த இடத்தில் அவிநாசி மற்றும் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மோப்பநாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் மூலம் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை சம்பவத்தில் வெங்கடேசன் என்பவரை கைது செய்த போலீசார் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பணத் தகராறில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 நபர்கள் கொல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:இரட்டிப்பு பணம் தருவதாக கூறி மோசடி.. ரூ.80 லட்சம் அபேஸ் செய்த தம்பதி கைது!

ABOUT THE AUTHOR

...view details