திருப்பூர் மாவட்டம் கருப்பகவுண்டம்பாளையம் பகுதியில் சாய சலவை ஆலையின் கழிவு நீர் தேக்கத் தொட்டியை வடமாநிலத்தைச் சேர்ந்த நான்கு தொழிலாளர்கள் சுத்தம் செய்ய முயன்றனர். அப்போது, விஷவாயு தாக்கி நான்கு பேரும் மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
திருப்பூரில் இயங்கிவந்த சாய சலவை ஆலைக்கு சீல்! - thiruppur
திருப்பூர்: பாதுகாப்பற்ற முறையில் இயங்கிவந்த சாயசலவை ஆலைக்கு வட்டாட்சியர் சீல் வைத்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

சாயசலவை ஆலை
சாயசலவை ஆலை
இதனைத்தொடர்ந்து பாதுகாப்பற்ற முறையில் இயங்கிய அந்த சாய சலவை ஆலைக்கு சீல் வைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் திருப்பூர் வட்டாட்சியர் மகேந்திரன் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு அலுவலர்கள் ஆலைக்கு சீல் வைத்து ஆலையின் மின் இணைப்பையும் துண்டித்தனர்.