திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் காரணமாக பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இன்று(செப்.22) திடீரென்று சுமார் மூன்று மணி நேரம் வரை ஏற்பட்ட மின்தடை காரணமாக நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் வழங்குவது பாதிக்கப்பட்டுள்ளது.
மின் தடை... ஆக்ஸிஜன் பற்றாக்குறை - திருப்பூரில் மூவர் உயிரிழப்பு - Power cut Tirupur three died
மின் தடை... ஆக்ஸிஜன் பற்றாக்குறை - திருப்பூரில் மூவர் உயிரிழப்பு
13:30 September 22
திருப்பூர்: அரசு மருத்துவமனையில் மின்தடை காரணமாக ஆக்ஸிஜன் வழங்குவதில் பற்றாக்குறை ஏற்பட்டு மூன்று பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே இங்கு சிகிச்சை பெற்று வந்த யசோதா, கவுரவன் உள்பட மூன்று பேர் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.
ஆனால், இது குறித்து அரசு மருத்துவமனை தரப்பில் இருந்து இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.
இதையும் படிங்க: மேகதாது அணைக்கு அனுமதி கூடாது - மோடிக்கு ஸ்டாலின் கடிதம்
Last Updated : Sep 22, 2020, 5:05 PM IST