திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள கொழுமத்திலிருந்து அமராவதி ஆற்றுப்பாலம் வழியாக குமரலிங்கத்திற்கு பைப்லைன் மூலமாக குடிநீர் செல்கிறது. இந்த குடிநீர் குழாயானது அழுத்தத்தின் காரணமாக தற்போது உடைந்து தண்ணீர் வெளியேறி வீணாகிவருகின்றது. ஆற்றுப்பாலத்தின் மேல் குடிநீர் குழாய் உடைந்து ஆற்றுக்குள் ஆகாய கங்கை போல் தண்ணீர் கொட்டுகிறது. ஆற்றில் தண்ணீர் இல்லாததால் அருவிபோல் கொட்டும் இந்த தண்ணீரில் பலர் குளித்து மகிழ்கின்றனர்.
அமராவதி ஆற்றுப்பாலத்தில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்! - amaravathi river
திருப்பூர்: உடுமலை கொழுமம் அமராவதி ஆற்றுப்பாலத்தில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிவருகிறது.
குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
இதேபோல் பாலத்தின் மேற்பரப்பில் கசியும் தண்ணீரானது பலத்தில் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குடிநீர் குழாய் உடைப்பு குறித்து பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் முறையிட்டும் தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில் உடைந்துள்ள குழாயை சரி செய்யாமல் அலுவலர்கள் அலட்சியம் காட்டிவருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.