தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் - ஆயுர்வேதம்

திருப்பூர்: ஆயுர்வேதம், யுனானி மருத்துவர்களும் அலோபதி மேற்படிப்பு படித்து அறுவை சிகிச்சை உள்ளிட்ட பணிகளில் ஈடுபடலாம் என்ற மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Doctors
Doctors

By

Published : Dec 11, 2020, 3:25 PM IST

மத்திய அரசு சமீபத்தில் ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட அனைத்து மருத்துவர்களும் அலோபதி மேற்படிப்பு படித்து அறுவை சிகிச்சை உள்ளிட்ட பணிகளில் ஈடுபடலாம் என்று அறிவித்திருந்தது. இதற்கு நாடு முழுவதும் மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தி தங்களது எதிர்ப்பை தெரிவித்திருந்தனர்.

மத்திய அரசு தங்கள் கோரிக்கையை ஏற்கவில்லை என இந்திய மருத்துவ சங்கம் சார்பாக இன்று நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருப்பூரில் 150க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள் அடைக்கப்பட்டு 650 மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் அவசர அறுவை சிகிச்சைகள், பிரசவம், கரோனா சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details