தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’அவசரகதி வேண்டாம், தரமான சாலையே வேண்டும்’ - மக்கள் போராட்டம்

திருப்பூர்: எம்எல்ஏவின் தேர்தல் நேர வருகையால், பாதாள சாக்கடை பணிகளுக்காக உடைக்கப்பட்ட குழாய்களை சரிசெய்யாமல் அவசரகதியில் சாலைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து பொதுமக்கள் முற்றுகைப் போரட்டத்தில் ஈடுபட்டனர்.

தரமான சாலை கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்
தரமான சாலை கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்

By

Published : Mar 25, 2021, 7:15 AM IST

திருப்பூர் மாவட்டம், பாளையக்காடு பகுதியில் மூன்று மாதங்களுக்கு முன்பு பாதாள சாக்கடை, குடிநீர் குழாய் பதிப்பதற்காக குழிகள் தோண்டப்பட்டு, எந்தப் பணிகளும் மேற்கொள்ளப்படாமல் இருந்தன.

தற்போது, அதிமுக சார்பில் திருப்பூர் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும் சட்டப்பேரவை உறுப்பினர் குணசேகரன் வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். இதன் காரணமாக உடைக்கப்பட்ட குழாய்களை சரி செய்யாமல் அவசரகதியில் சாலைப்பணி மேற்கொண்டுள்ளனர்.

மேலும், பாறைகளை அகற்றுவதற்காக வெடி வைக்கப்பட்டதால் வீடுகளில் விரிசல் ஏற்பட்டதாகவும் பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில், அவசர கதியில் மேற்கொள்ளப்படும் இந்தப் பணிகளை உடனடியாக நிறுத்தி, முறையாக குழாய் உடைப்புகளை சரி செய்து, தரமான தார் சாலை அமைக்க வேண்டும் எனக்கோரி, பொதுமக்கள் ஜேசிபி வாகனங்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க :படிப்புடன் தோட்டக்கலை கல்வியைத் தரும் பிகார் பள்ளி ஆசிரியர்

ABOUT THE AUTHOR

...view details