திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே முக்கோணம் பகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் மடத்துக்குளம் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் ஜெயராமகிருஷ்ணன், உடுமலை சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் தென்னரசு ஆகியோரை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது, உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், "தாராபுரத்திற்கு வந்த மோடி நான் குறுக்கு வழியில் வந்தவர் என்றார். அதேபோல் அமித்ஷாவும் உதயநிதி வளர்ச்சி முக்கியமா? தமிழ்நாடு வளர்ச்சி முக்கியமா? என கேள்வியெழுப்பினார். இப்போது சொல்கிறேன், என் வளர்ச்சியை விட தமிழ்நாடு வளர்ச்சி தான் முக்கியம். அமித்ஷாவின் மகன் ஜெய்ஷாவின் சொத்து மதிப்பு ரூ.120 கோடியாக உயர்ந்துள்ளது.