தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'திமுக தடை செய்யப்பட வேண்டிய கட்சி' - பிரேமலதா - தேமுதிக முப்பெரும் விழா

திருப்பூர்: இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசிவரும் திமுக தடை செய்யப்பட வேண்டிய கட்சி என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

premalatha

By

Published : Sep 16, 2019, 7:42 AM IST

திருப்பூர் காங்கயம் சாலையில் நடைபெற்ற தேமுதிக முப்பெரும் விழாவில் தொண்டர்களிடையே உரையாற்றிய அக்கட்சி பொருளாளர் பிரேமலதா, " பேனர் வைக்கக் கூடாது என்றால் அதை ஏற்கும் முதல் கட்சி தேமுதிகதான்.

ஸ்டாலின் நீண்ட தூக்கத்திலிருந்து இப்போதுதான் விழித்துக்கொண்டார் போல, அதிமுக பேனர் விழுந்ததும் நீலிக்கண்ணீர் வடிக்கிறார். பேனர் வைக்கும் விழாக்களுக்கு தான் செல்லமாட்டேன் என அவர் கூறியுள்ளார். ஆனால், பேனர் கலாசாரத்தை தமிழ்நாட்டில் கொண்டுவந்ததே திமுகதான் என்பதை அவர்கள் ஒருபோதும் மறுக்கமுடியாது.

பிரேமலதா பேச்சு

கேப்டன் கட்சி தொடங்கிய பின் திமுக ஆட்சிக்கு வரமுடியவில்லை. இனியும் வர முடியாது. ஒரு எதிர்க்கட்சித் தலைவர் எப்படி இருக்கவேண்டும் என்ற வரலாற்றைப் படைத்தவர் கேப்டன்.

இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசிவரும் திமுக தடை செய்யப்பட வேண்டிய கட்சி. என்ஐஏ (தேசியப் புலனாய்வு முகமையம்) திமுக மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது என்றார்.

ABOUT THE AUTHOR

...view details