திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட மலைப் பகுதியில் ஏராளமான பழகுடியின மக்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் வசிக்கும் மலைப் பகுதியானது ஈசல் திட்டு மலை கிராமம் என்று அழைக்கப்படுகிறது.
இக்கிராமம் ஜல்லிப்பட்டி பகுதியிலிருந்து எட்டு கிலோமீட்டர் அடர்ந்த மலைப்பகுதியின் உச்சியில் உள்ளது. இங்கு இருசக்கர வாகனங்கள் உள்பட எந்த வாகனம் செல்ல முடியாது.
கரோனாவால் பாதிக்கப்பட்ட மழைவாழ் மக்களுக்கு திமுக எம்எல்ஏ உதவி இந்தச் சூழ்நிலையில் மடத்துக்குளம் திமுக எம்எல்ஏ ஜெயராமகிருஷ்ணன் அடர்ந்த வனப்பகுதிக்குள் கரடுமுரடான மலைப்பகுதியில் கட்சி நிர்வாகிகளுடன் நடந்து சென்று அங்கு உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண பொருள்கள், நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரை (ஆர்சனிகம் ஆல்பம் - 30 சி ) வழங்கினார்.
இதுவரை அப்பகுதியில் எந்த ஒரு அரசியல் தலைவர்களும் அரசு அலுவலர்களும் சென்றதில்லை. தற்போது முதன்முதலாக மடத்துக்குளம் திமுக எம்எல்ஏ ஜெயராமகிருஷ்ணன் மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதிக்கு நேரில் சென்று நிவாரண பொருள்களை வழங்கியதால் பழகுடியின மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
பின்னர் குடிநீர் தொட்டி தேவைப்படுவதாக அவர்கள் கூறியதை தொடர்ந்து எம்எல்ஏ உடனடியாக ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி வழங்கினார். மேலும் அங்கு வசிக்கும் மக்கள் அனைவருக்கும் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தருவதாக அவர் உறுதி அளித்தார்.
இதையும் படிங்க: ரூ. 151.57 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர்!