திருப்பூர் திருமுருகன்பூண்டியில் உள்ள தனியார் ஹோட்டலில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், டி.கே.எஸ் இளங்கோவன் மற்றும் துணை பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கட்சியினரிடம் தேர்தல் அறிக்கை தொடர்பான மனுக்களை பெற்றனர்.
தேர்தல் அறிக்கை தயாரிக்க மும்முரம் காட்டும் திமுக - DMK Election manifesto Preparation Committee
திருப்பூர்: திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
DMK
இந்தக் கூட்டத்தில் திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட எட்டு சட்டப்பேரவை தொகுதிகளுக்கான நான்கு பொறுப்பாளர்களும் கலந்துகொண்டனர். இதில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய பிரச்னைகள் குறித்து தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டும் என கட்சியினர் கோரிக்கை வைத்தனர்.
இதையும் படிங்க:பாஜகவின் பிகார் தேர்தல் அறிக்கை மக்களை ஏமாற்றும் வேலை - சொல்கிறார் திமுக எம்எல்ஏ!