தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெருங்கும் தேர்தல்: தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனை - தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில், தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருப்பூரில் நேற்று (ஜன.8) நடைபெற்றது.

dmdk party meeting
நெருங்கும் தேர்தல்

By

Published : Jan 9, 2021, 8:56 AM IST

திருப்பூர்: சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு திருப்பூர், கோயம்புத்தூர், நாமக்கல், ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டத்திலுள்ள தேமுதிக தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் திருப்பூரில் நடந்தது.

இதில் தேதிமுக துணை செயலாளர் பார்த்தசாரதி கலந்துகொண்டு தொகுதி பொறுப்பாளர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜன.10) திருப்பூரில் மாற்றுக் கட்சியில் இருந்து உறுப்பினர்கள் தேமுதிகவில் இணைகிறார்கள். இந்நிகழ்ச்சி கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் முன்னிலையில் நடைபெற இருக்கிறது.

தற்போது வரை அதிமுக கூட்டணியில் இருக்கிறோம். தொகுதி பங்கீடு குறித்து மறைமுகமாக தெரியப்படுத்தி இருக்கிறோம். மற்ற விபரங்கள் பொதுக்குழுவில் கூடி முடிவு எடுக்கப்படும். கூட்டணி உடன்பாடு ஏற்பட்ட பிறகு தேர்தல் பரப்புரை தொடங்கும். தேர்தல் பரப்புரையில் விஜயகாந்த் கண்டிப்பாக கலந்து கொள்வார்” என்றார்.

இந்நிகழ்ச்சியில் தேமுதிகவின் மாநில மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details