திருப்பூர் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில், திருப்பூர் காங்கயம் சாலையில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் சித்த மருத்துவ முறையில் சிகிச்சை அளிப்பதற்கான 100 படுக்கைகளுடன் சித்த மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சித்த மருத்துவ முகாமை ஆய்வுசெய்த ஆட்சியர் - திருப்பூர் செய்திகள்
திருப்பூர்: கரோனா பரிசோதனைக்காக 100 படுக்கைகளுடன் ஏற்பாடு செய்யப்பட்ட சித்த மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.
இதை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் நேரில் ஆய்வு செய்து மருத்துவர்களுடன் முன்னேற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் 2 ஆயிரத்து 800 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன. தற்போது சித்த மருத்துவத் துறை சார்பில் 100 படுக்கைகளுடன் கூடிய முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நோய்த் தொற்று பாதிக்கப்படுபவர்களின் வசதிக்கேற்ப சிகிச்சை அளிக்கவும் தயார் நிலையில் இருக்கிறது என்று கூறினார்.