தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிகரிக்கும் கரோனா... திருப்பூரில் புதிய கட்டுப்பாடுகள்! - tirupur collector veeneth

திருப்பூரில் கரோனா பரவலை கட்டுப்படுத்த இன்று முதல் புதிய கட்டுப்பாடுகளை விதித்து அம்மாவட்ட ஆட்சியர் வினித் உத்தரவிட்டுள்ளார்.

thirupur
திருப்பூர்

By

Published : Aug 5, 2021, 12:16 PM IST

திருப்பூர் மாவட்டத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்த, இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன. கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து, புதிய கட்டுப்பாடுகளை மாவட்ட ஆட்சியர் வினித் அறிவித்துள்ளார்.

புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன:

  • அத்தியாவசிய கடைகளை தவிர, அனைத்து மளிகை கடை, காய்கறி கடை, பேக்கரி உள்ளிட்ட பிற கடைகள் அனைத்தும் காலை 6 முதல் மாலை 5:00 மணிவரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும்.
  • சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சூப்பர் மார்க்கெட்கள், வணிக வளாகங்கள் இயங்க தடை
  • அனைத்து மதுக்கடைகள் காலை, 10 முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்படும்
  • அனைத்து பூங்காக்களிலும், ஞாயிறு மட்டும் மக்கள் வருகைக்கு தடை விதிக்கப்படுகிறது
  • உணவகங்களில், 50 விழுக்காடு வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவருந்த வேண்டும்
  • கேரளாவில் இருந்து வருபவர்கள் கரோனா நெகட்டிவ் சான்றிதழ் அல்லது இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.

முன்னதாக, பெரம்பலூர் நகராட்சி, அரும்பாவூர், லப்பைக்குடிக்காடு பேரூராட்சி பகுதிகளில் வணிக நிறுவனங்கள் செயல்படும் பகுதிகளில் ஆகஸ்ட் 4 முதல் 10ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:பாடப்புத்தகங்களில் சாதிப் பெயர்கள் நீக்கம்!

ABOUT THE AUTHOR

...view details