திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே திருமூர்த்தி மலையில் பிரசித்தி பெற்ற அமணலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில், ஆண்டுதோறும் ஆடி அமாவாசை நாளில் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் ரேக்ளா மாட்டு வண்டிகளில் வந்து சிறப்பு வழிபாடுகள் செய்வது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் ஆயிரக்கணக்கான மக்கள் ரேக்ளா மாட்டு வண்டிகளில் வந்து வழிபாடுகள் செய்தனர்.
மாட்டுவண்டிகளில் வந்து கோயிலில் வழிபாடு!
திருப்பூர்: ஆடி அமாவாசை நாளை முன்னிட்டு அமணலிங்கேஸ்வரர் கோயிலில் விவசாயிகள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் சிறப்பு பூஜை செய்தனர்.
விவசாயிகள் ரேக்ளா மாட்டுவண்டிகளில் வந்து சிறப்பு வழிபாடு
முன்னோர்களுக்கு தர்பணம் செய்தும் கால்நடைகள் நலமுடன் வாழவும் சிறப்பு பூஜைகள் செய்தனர். பின்னர், ஒருவர் பின் ஒருவர் வரிசையாக சாலைகளில் மாடுகளை ஓட்டி சென்று மகிழ்ந்தனர்.