தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முழு நேர ஊரடங்கு: முடங்கியது பின்னலாடை நகரம் - முழு நேர ஊரடங்கு

திருப்பூர்: முழு ஊரடங்கு காரணமாக, காவல் துறையினர் பல்வேறு பகுதிகளில் தற்காலிக சோதனைச்சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

Sunday curfew in tiruppur
Sunday curfew in tiruppur

By

Published : Apr 25, 2021, 2:25 PM IST

தமிழ்நாடு முழுவதும் கரோனா தொற்று இரண்டாவது அலை வேகமாகப் பரவிவருகிறது. இதைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன்படி, முழு ஊரடங்கான இன்று திருப்பூரில் கடைகள், வணிக நிறுவனங்கள், பின்னலாடை நிறுவனங்கள் அனைத்தும் முழுவதுமாக அடைக்கப்பட்டுள்ளன.

மேலும் சாலைகளில் அத்தியாவசிய தேவைகளின்றி வெளியே செல்வதைக் கண்காணிக்கும் வகையில் காவல் துறையினர் ஆங்காங்கே பல்வேறு பகுதிகளில் தற்காலிகச் சோதனைச்சாவடி அமைத்துள்ளனர். தொடர்ந்து, அநாவசியமாக வெளியே வருபவர்களிடம் அபராதம் வசூலித்துவருகின்றனர்.

இது மட்டுமின்றி, ஊரடங்கு அமலில் உள்ள நேரத்தில் அத்தியாவசிய தேவைகளின்றி யாரும் வெளியே வர வேண்டாம் எனக் காவல் துறையினர் ஒலிபெருக்கி மூலம் எச்சரித்துவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details