தமிழ்நாட்டில் கால்நடை சந்தைகளை கரோனா தொற்று காரணமாக மூடியதன் விளைவாக விவசாயிகளும், கால்நடைகளை வளர்ப்பவர்களும் பெரும் பாதிப்புக்குள்ளாகினர். அதனால் இடைத்தரகர்கள் கொள்ளை இலாபம் பெறுகின்றனர். இதனை கருத்தில் கொண்டு கால்நடை சந்தைகளை உடனடியாக தமிழ்நாடு அரசு திறக்க வேண்டும்.
அனைத்து கால்நடை சந்தைகளையும் உடனடியாக திறக்க வேண்டி ஆர்ப்பாட்டம் - திருப்பூர் மாவட்ட செய்திகள்
திருப்பூர்: தமிழ்நாட்டில் மூடப்பட்டுள்ள அனைத்து கால்நடை சந்தைகளை உடனடியாக திறக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கட்சி சார்பற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்து விட்டு நிலுவை வைத்துள்ள தொகைகளை விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க வேண்டும். மேலும் ஆவின் நிறுவனம் உற்பத்தியாகும் பாலை விவசாயிகளிடம் முழுமையாக கொள்முதல் செய்ய வேண்டும். ஆவின் பால் பூத் அனைத்தும் டீ கடையாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் பால் விற்பனை அங்கு சரிவை சந்தித்துள்ளது.
எனவே ஆவின் பால் பூத்தில் பால் விற்பனை மட்டுமே தொடர வழிவகை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கட்சி சார்பற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.