தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்றதும் நீட் தேர்வு ரத்து - தயாநிதி மாறன் - நீட் தேர்வு ரத்து

திருப்பூர்: திருப்பூர் தெற்குச் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் கூட்டணி வேட்பாளர் செல்வராஜை ஆதரித்து, திமுக எம்பி தயாநிதி மாறன் பரப்புரையில் ஈடுபட்டார்.

dayanithi maran
தயாநிதி மாறன்

By

Published : Mar 31, 2021, 8:37 PM IST

திருப்பூர் தெற்குச் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர் செல்வராஜை ஆதரித்து, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் நொய்யல் வீதி பகுதியில் பரப்புரையில் ஈடுபட்டார்.

திமுக எம்பி தயாநிதி மாறன் பரப்புரை

அப்போது பேசிய அவர், "நீட் தேர்வினால் உங்கள் குழந்தைகளின் எதிர்கால டாக்டர் கனவு பறிபோயுள்ளது. தமிழ்நாட்டில் முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்றவுடனே நீட் தேர்வு ரத்துசெய்வதற்கான நடவடிக்கையைக் கண்டிப்பாக மேற்கொள்வார்.

புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் நம் பிள்ளைகளின் எதிர்கால பட்டப்படிப்பைக் கேள்விக்குறியாக்கும் சூழலை மத்திய அரசு மேற்கொள்கிறது. இந்நிலை மாற திமுக கூட்டணி வெற்றிபெற வேண்டும். ஏப்ரல் 6ஆம் தேதி உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க:கருத்துக்கணிப்பு அல்ல கருத்துத்திணிப்பு; ஊடகங்கள் மீது ஓபிஎஸ்-இபிஎஸ் பாய்ச்சல்!

ABOUT THE AUTHOR

...view details