தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெடிவைத்து கிணறு வெட்டுவதால் வீட்டுச் சுவர்களில் விரிசல்! - Tirupur District News

திருப்பூர்: உடுமலைப்பேட்டையில் வெடிவைத்து கிணறு வெட்டுவதால் அருகிலுள்ள வீட்டுச் சுவர்களில் விரிசல் ஏற்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தோர்
ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தோர்

By

Published : Dec 22, 2020, 5:26 PM IST

உடுமலைப்பேட்டையில் வெடிவைத்து கிணறு வெட்டுவதால் சுவர்களில் விரிசல் ஏற்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.

அந்த புகார் மனுவில், “திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை உள்பட்ட விளாமரத்துபட்டி கிராமத்தில் தனியார் தோட்டத்தில் வெடிவைத்து கிணறு தோண்டும் பணி நடைபெற்று வருகிறது.

இதனால் அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளின் சுவர்களில் விரிசல் ஏற்படுவதோடு, இடியும் நிலையில் உள்ளது.

இது குறித்து அரசு அலுவலர்களிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கபடவில்லை.

எனவே, வெடிவைத்து கிணறு தோண்டும் பணியை நிறுத்தி, தங்களது உயிருக்கும், வீட்டிற்கும் பாதுகாப்பு ஏற்படுத்தி தர வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:‘நிவாரணம் வழங்காத அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவோம்’ - சமையல் கலைஞர்கள் சங்கம்!

ABOUT THE AUTHOR

...view details