குடியுரிமை திருத்தச் சட்டம், என்பிஆர், என்ஆர்சி ஆகியவற்றை திரும்பப் பெற வேண்டும் , தமிழ்நாடு சட்டப்பேரவையில் அதற்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருப்பூர் மாநகராட்சி எதிராக சத்தியாகிரகப் போராட்டம் நடைபெற்றது.
’சிஏஏ, என்பிஆர், என்ஆர்சியை திரும்பப் பெறும்வரை போராட்டம் தொடரும்’ - ஜி ராமகிருஷ்ணன்
திருப்பூர்: குடியுரிமை திருத்தச் சட்டம், என்பிஆர், என்ஆர்சி ஆகியவற்றை திரும்பப் பெறும்வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டம் தொடரும் என திருப்பூர் சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், குடியுரிமை திருத்தச் சட்டம், என்பிஆர், என்ஆர்சி ஆகியவற்றை திரும்பப் பெறும்வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடும் , 13 மாநிலங்களின் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையிலும், அதிமுக அரசு இன்னும் காலதாமதம் செய்து வருகிறது. நடப்பு சட்டப்பேரவை கூட்டத் தொடரிலேயே என்பிஆர், என்ஆர்சியை செயல்படுத்த மாட்டோம் என தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்தார்.