அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரித்து தரம் உயர்த்துவதாக தெரிவித்திருந்த துணை வேந்தர் சூரப்பாவிற்கு மாநிலத்தின் அனைத்து எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. சிறப்பு அந்தஸ்து என்ற பெயரில் ஏழை எளிய மாணவர்களின் கல்வி உரிமையை பறிக்கும் இந்த செயலை கைவிட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டுவந்தது.
துணைவேந்தார் சூரப்பா பதவி விலகக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்! - அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா
திருப்பூர்: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை பதவி விலகக்கோரி திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
துணைவேந்தார் சூரப்பா பதவி விலகக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்!
இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தார் சூரப்பா பதவி விலக வேண்டும், தமிழ்நாடு மருத்துவ மாணவர்களின் உள் இட ஒதுக்கீடு சட்டத்திற்கு தமிழ்நடு ஆளுநர் அனுமதி அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாநகராட்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
TAGGED:
cpim protest