திருப்பூர்: சமையல் எரிவாயுவின் விலை கடந்த 15 நாட்களில் 100 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இதை கண்டித்தும் சமையல் எரிவாயு விலை உயர்வால் சாமானிய மக்கள் மீண்டும் விறகு அடுப்பில் சமைக்கும் நிலையை சுட்டுக்காட்டியும் திருப்பூர் பட்டுக்கோட்டையார் நகரில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலையில் விறகு அடுப்பில் சமைத்து நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.
சமையல் எரிவாயு விலை உயர்வு: விறகு அடுப்பில் சமைத்து போராட்டம் - சமையல் எரிவாயு விலை உயர்வு
சமையல் எரிவாயுவின் விலை உயர்ந்துள்ள நிலையில், திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலையில் விறகு அடுப்பில் சமைத்து நூதன முறையில் போராட்டம் நடத்தனர்.
சமையல் எரிவாயு விலை உயர்வு: விறகு அடுப்பில் சமைக்கும் போராட்டம்
புதியன புகுதலும் பழையன கழிதலும் என்ற பழமொழி பாஜக ஆட்சியில் புதியன கழிதலும் பழையன புகுதலும் என்ற புதுமொழியாக மாறியுள்ளதாக ஆர்ப்பாட்டத்தின்போது சுட்டிக்காட்டி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதையும் படிங்க:திருப்பூரில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடப்பதில் ஏன் தாமதம்?