திமுக முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சுவாமிநாதன் இல்ல திருமண விழா திருப்பூரில் இன்று நடைபெற்றது. இந்த திருமணத்தில் கலந்துகொண்ட திமுக தலைவர் ஸ்டாலின், தமிழ் முறைப்படி திருமணத்தை நடத்தி வைத்தார்.
இந்த திருமண விழாவில் கலந்துகொண்டு பேசிய பாஜக மூத்தத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், கருணாநிதிக்கு பின்னர் திமுகவை யார் வழிநடத்துவது என்ற சூழல் உருவாகியபோது, வெறும் தளபதியாக மட்டுமின்றி பாஜகவை வீழ்த்தி வெற்றித் தளபதியாக திகழ்ந்து கொண்டிருக்கிறார் ஸ்டாலின் என்றும், இவரின் இந்த வெற்றியின் மூலம் நாம் இன்னும் எவ்வளவு உழைக்க வேண்டும் என்பதை அவர் உணர்த்தியிருப்பதாகவும் குறிப்பிட்டு பேசினார்.