தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாய்க்காலில் தவறி விழுந்த மகனின் உடலை மீட்கக் கோரி மனு அளித்த தம்பதி - திருப்பூர் மாவட்ட செய்திகள்

திருப்பூர்: பிஏபி வாய்க்காலில் தவறி விழுந்து உயிரிழந்த மகனின் உடலை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெற்றோர் மனு அளித்தனர்.

parents requests to district collector
மனு அளித்த தம்பதி

By

Published : Jan 25, 2021, 4:39 PM IST

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் சாலையைச் சேர்ந்த தாஜூதீன்- அசினா தம்பதியினரின் மகன் மகபூப் பாஷா. கல்லூரி மாணவரான இவர், கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் தாராபுரம் சாலையில் உள்ள ஆண்டிபாளையம் பிஏபி வாய்க்காலில் விளையாட சென்றுள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக தவறி வாய்க்காலில் விழுந்துள்ளார். இது குறித்து தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. ஆனால் மூன்று நாள்கள் ஆகியும் அவரது உடல் மீட்கப்படவில்லை. தீயணைப்புத் துறையினர் ஒரு நாள் மட்டுமே தேடி வந்த நிலையில் தண்ணீரின் வேகம் அதிகமாக இருப்பதாகக் கூறி தேடுதலை நிறுத்தினர்.

மகபூப் பாஷா

இந்நிலையில், பிஏபி வாய்க்காலில் தண்ணீர் செல்வதை நிறுத்தி மாவட்ட நிர்வாகம்தனது மகனின் உடலை மீட்டுத்தர வேண்டும் என வலியுறுத்தி பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

இதையும் படிங்க:கப்பல் ஆற்று ஊரணியை கடந்து உடலை எடுத்துச் செல்லும் பொதுமக்கள்

ABOUT THE AUTHOR

...view details