திருப்பூர்:திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூருக்கு ஈரோடு மாவட்டம் நம்பியூரிலிருந்து பஞ்சுப் பேரல்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்றது. லாரி திருப்பூர் மாவட்டம் அவிநாசி வழியாக கைகாட்டி புதூர் அருகே செல்லும்போது, நிலைதடுமாறிய லாரி சாலையின் நடுவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
திருப்பூரில் பஞ்சு லோடு ஏற்றிவந்த லாரி கவிழ்ந்து விபத்து - tirupur news
ஈரோட்டிலிருந்து திருப்பூருக்கு பஞ்சு லோடு ஏற்றிவந்த லாரி அவிநாசியருகேயுள்ள கைகாட்டி புதூர் அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
Cotton load van accident
இதில், லாரியில் இருந்த 10 டன் எடையுள்ள 140 பேரல் பஞ்சுகள் சாலையில் கொட்டியதால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது . உடனடியாக போக்குவரத்து காவல் துறையினர் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க...தமிழ்நாட்டில் மேலும் 685 பேருக்கு கரோனா தொற்று உறுதி!