உலகை அச்சுறுத்தும் கரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ள இன்று (மார்ச் 22) மக்கள் தாங்களாக முன்வந்து ஊரடங்கைப் பின்பற்ற வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். மேலும் கரோனா தொற்றை தடுக்கும் வகையில் அர்ப்பணிப்போடு பணியாற்றும் மருத்துவர்கள், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்டோர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கர ஓசை எழுப்புங்கள் எனவும் கூறியிருந்தார்
பேண்ட் வாத்தியத்தியத்துடன் நன்றி தெரிவித்த ஊர்க்காவல் படை! - சுய ஊரடங்கு உத்தரவு
திருப்பூர்: கரோனா தொற்று நோயை தடுக்கும் வகையில் பணியாற்றுபவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஊர்க்காவல் படையினர் பேண்ட் வாத்தியம் இசைத்தனர்.
home
இதனையடுத்து இன்று நாடு முழுவதும் சுய ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. மாலை 5 மணியளவில் கரோனா தொற்றை தடுக்கும் பணியில் ஈடுபட்டவர்களுக்கு திருப்பூர் குமரன் ரோட்டில் உள்ள தமிழக ஊர்க்காவல் படை அலுவலகம் முன்பு ஊர்க்காவல் படையினர் பேண்ட் வாத்தியம் இசைத்து தங்கள் நன்றியினை தெரியப்படுத்தினர்.