தமிழ்நாட்டில் நேற்று (ஜூலை 23) 6 ஆயிரத்து 472 பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 92 ஆயிரத்து 964 ஆக அதிகரித்துள்ளது.
திருப்பூரில் 600-ஐ எட்டிய கரோனா பாதிப்பு! - கரோனா வைரஸ் திருப்பூர்
திருப்பூர்: மாவட்டத்தில் புதிதாக 33 பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்படத்தையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 600-ஆக அதிகரித்துள்ளது.
இதில், திருப்பூர் மாவட்டத்தில் இன்று புதிதாக 33 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 600ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் இதுவரை இத்தொற்றால் எட்டு பேர் உயிரிழந்த நிலையில், நேற்று இரண்டு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
திருப்பூர் பிரியங்கா நகரைச் சேர்ந்த 59 வயது ஆண், எஸ்.வி காலனியை சேர்ந்த 71 வயது முதியவர் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் மாவட்டத்தில் இறப்பு எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது