திருப்பூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நவம்பர் 6ஆம் தேதி வருகை தருகிறார்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு அலுவலர்களுக்கு கரோனா பரிசோதனை! - cm function at Tirupur
திருப்பூர்: முதலமைச்சர் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள உள்ள அரசு அலுவலர்கள் , காவல் துறை அலுவலர்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திருப்பூர்
இந்நிலையில் இன்று, முதலமைச்சர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ள அரசு அலுவலர்கள் , காவல் துறை அலுவலர்கள், நலத்திட்ட உதவிகளை பெறக்கூடிய பயனாளிகள் மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட அனைவருக்கும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதே போல், நிகழ்ச்சிக்கு செல்லவுள்ள பத்திரிகையாளர்கள், ஒளிப்பதிவாளர்களுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.